மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

 லாரி மோதி அதிமுக கிளைச் செயலர் சாவு

பெரம்பலூரில், மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 8-வது வார்டு அதிமுக கிளைச்செயலர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

News image
Updated On :3 செப்டம்பர் 2013, 5:40 pm

தர்மராஜ்

பெரம்பலூரில், மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 8-வது வார்டு அதிமுக கிளைச்செயலர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தை சேர்ந்தவர் மருதமுத்து மகன் நாகராஜ் (42).  8-வது வார்டு அதிமுக கிளைச் செயலரான இவர், செவ்வாய்க்கிழமை காலை பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள காமராஜர் சிலை அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, சென்னையிலிருந்து கரூருக்கு உரம் ஏற்றிச்சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நாகராஜன் சம்பவ இடத்திலேயே செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தார்.

இதுகுறித்து, அவரது உறவினர் சிதம்பரம் (58) அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்த பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் சர்புதீன், துறையூர் அருகே உள்ள புடலாசி கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் லாரி ஓட்டுநர் சுந்தர்ராஜை (23) கைது செய்து, பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.